சீன ஆக்கிரமிப்பு: ராகுல் கேள்வி

புதுதில்லி: இந்திய-சீன ராணுவத்தினரிடையே லடாக் எல்லை, கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழப்பைச் சந்தித்தனர். இதனால் இரு நாடுகளிடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அவ்வப்போது சிறுசிறு மோதல் பிரச்னைகள், எல்லை மீறல் போன்றவை நடந்து வருகின்றன.

இச்சூழலில் கொரோனா தொற்று காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்பட்டுள்ளதாகவும், இது கடவுளின் செயல் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.  இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. அதை எப்போது திரும்பப் பெற அரசு திட்டமிட்டுள்ளது. அல்லது இதுவும் கடவுள் செயல் என அரசு விட்டுவிடப் போகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.