சீனா மருந்து பொருள்களைக் கட்டுப்படுத்தவில்லை

சீனா மருத்துப் பொருள்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தவில்லை என்று அதன் சுங்கத் துரை தலைமை நிர்வாக பொது அலுவலர் பிரிவு தலைவர் ஜின் ஹாய் தெரிவித்துள்ளார்.
சீன அரசவையின் கூட்டுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயங்குமுறையின் நிருபர்களின் சந்திப்புக் கூட்டம் ஏப்.5-இல் நடைபெற்றது. இதில் ஜின் ஹாய் தெரிவித்தது;
மார்ச் 1 முதல் ஏப்ரல் 4 வரை கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்புக்காக 1,020 கோடி யுவான் மதிப்பில் மருத்துவப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மருந்து பொருள்களின் ஏற்றுமதியை சீனா கட்டுப்படுத்தவில்லை என்றார்.
54 நாடுகள், 3 சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றுடன் மருத்துவப் பொருள்களின் ஏற்றுமதி ஒப்பந்தத்தில் சீனா கையொப்பமிட்டுள்ளது என வணிக அமைச்சகத்தைச் சேர்ந்த வெளி வர்த்தகப் பிரிவின் முதன்மை ஆலோசகர் ஜியாங் ஃபான் தெரிவித்தார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.