சீனப் பொருளாதார வளர்ச்சி 6.8 % குறைந்தது

சீனா: கொவைட்-19 பாதிப்பு காரணமாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் குறைந்துள்ளது.
நடப்பாண்டின் முதலாவது காலாண்டில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 20 இலட்சத்து 65 ஆயிரத்து 40 கோடி யுவான். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததைக் காட்டிலும் 6.8 விழுக்காடு குறைவு.
சீனத்தின் தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் மௌ செங்யோங் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் இதை தெரிவித்தார். கொவைட்-19 வைரஸ் பரவலினால் சீனா கடுமையான அறைகூவல்களைச் சமாளித்துள்ளதோடு, சீனப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் ஒட்டுமொத்த முன்னேற்றப் போக்கு நிதானமாக விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அதே நாள் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறியது: முதலாவது காலாண்டில், சீனத் தானிய உற்பத்தி சீராக வளர்ந்து வந்துள்ளது. வேளாண் துறையில் அதன் உற்பத்தி மதிப்பு 3.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. தொழில் துறையின் உற்பத்தி மதிப்பு குறைந்துள்ளது. அதேவேளையில், அடிப்படை மூலவளத் தொழில் துறை, உயர் தொழில் நுட்பத் தயாரிப்பு தொழில் துறை ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
சேவைத் துறையின் உற்பத்தி குறைந்து, புதிய சேவைத் தொழில் துறையின் அதிகரிப்பு முன்னேற்றப் போக்கு சீராக வளர்ந்து வருகிறது. முதலீட்டு நடவடிக்கைகள் மந்தமாக காணப்பட்டுள்ளன. இருப்பினும், மின்னணு வணிகம், சிறப்பு தொழில் நுட்பச் சேவை, கொவைட்-19 வைரஸ் பரவல் தடுப்புடன் தொடர்புடைய தொழில் துறைகளுக்கான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. சரக்குப் பொருடள்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி குறைந்துள்ளது. எனினும், வர்த்தகக் கட்டமைப்பு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.