சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு


புதுதில்லி: இம்மாதம் 30-ஆம் தேதி நடைபெறவிருந்த சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட அதிகாரிகளை தேர்வு செய்யும் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) இம்மாதம் 30-ஆம் தேதி சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு நடைபெறும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இத்தேர்வில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க தயாராகி வந்தனர். கொரோனா நோய்த் தொற்றில் வேகம் இன்னும் குறையாத சூழலில் இந்த தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக திங்கள்கிழமை அறிவிப்பு வெளியானது.
தேர்வுக்கான புதிய தேதி வரும் 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.