சித்திரை மாத ராசிபலன்

கணிப்பு: “ஜோதிட ரத்னா”
து.ராமராமாநுஜதாஸன்


மேஷம்

தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக செல்ல நினைத்த புனித யாத்திரைக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். உங்கள் வாழ்வில் இருந்த தடைகள் அகன்று சுபிட்சம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலும் குடும்ப தேவைக்காக சுபச்செலவுகள் அதிகரிக்கும். பேச்சால் அனைவரையும் வசீகரிக்கும் தன்மை ஏற்படும். மனதில் தைரியம் உற்சாகம் அதிகரித்து எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் ஏற்படும்.


சகோதர சகோதரிகளால் நன்மை ஏற்படும் மனக்கவலை குறையும் தொழில் வியாபாரத்தில் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் அமைதி குறைய வாய்ப்புண்டு. எனவே கணவன் மனைவி அனுசரித்து செல்ல வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலதிகாரிகள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.
அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நன்று உடல்நலத்தில் கவனம் தேவை. பங்கு சந்தையில் லாபம் பெருகும். பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும் குலதெய்வ அனுகூலம் உண்டு உங்கள் தனித்திறமை வெளிப்படும் காலமிது வியாபாரிகள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நன்று பங்குதாரர்களிடம் பிரச்சினை வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை எதிலும் வெற்றி நடை போடக் கூடிய காலமாகும்.

ரிஷபம்

நன்மைகள் வந்து சேரும் காலமிது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். போட்டிகள் குறையும். மனதில் சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கப்பெறுவீர்கள். செய்தொழிலில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். இனிமையாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

உடல்சோர்வு பெரிதுபடுத்தாமல் பாடுபடுவீர்கள். தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் கட்டுக்குள் இருக்கும். அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற சகாக்களிடம் அன்பு பாராட்டுவார்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினை இருந்து விடுபடுவீர்கள். வாகன யோகம் உண்டாகும். எதிர்ப்புகள் குறையும்.

நீண்ட காலமாக காத்திருந்த அயல்நாட்டு வேலைக்கான உத்தரவுகள் வர வாய்ப்பு உண்டு. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் பல முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மேலும் மேலிடத்தில் பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. சகோதர உறவுகள் சரியான நேரத்தில் கைகொடுக்கும் மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.

ஆர்வத்துடன் பாடங்களைப் படித்து நன்கு மதிப்பெண் எடுப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியூர் செல்ல வாய்ப்பு உண்டு. தாய் மற்றும் அவரது உறவுகளால் ஆதாயம் உண்டாகும் புதிய சொத்து வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும் உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து நன்மை ஏற்படும்.

அலுவலகச் சூழ்நிலை நல்ல மாற்றம் தென்படும். கணவன் மனைவி இடையே சிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு பின்பு சரியாகும். எதிலும் பொறுமை தேவையான காலம் எது தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

மிதுனம்

எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் வெற்றி பெறலாம். தந்தை மற்றும் அவரது உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வீடு தேடி வரும். உங்கள் பேச்சில் இனிமை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. உங்கள் முயற்சிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தாய் மற்றும் உறவினர்கள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் . வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். நோயுள்ளவர்கள் உணவில் கவனம் செலுத்தவும். கணவரிடம் வாக்குவாதம் கூடாது விட்டுக்கொடுத்து செல்லவும். அனைவரிடத்திலும் அன்பாக பேசி பழகும் தங்கள் கோபத்தை யார்மீதும் காட்டக்கூடாது. பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும்.

வியாபாரத்தில் பங்குதாரர்கள் கவனம் தேவை. முடிந்தவரை தனியே வியாபார விஷயங்களை கையாள்வது நல்லது. எதிலும் கவனமுடன் செயல்படுங்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பொறுமை நிதானம் அவசியம். வாகன பயணங்களில் கவனம் தேவை. நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஜாமீன் கையெழுத்துப் போடுவது முடிந்தவரை தவிர்க்கவும்.

இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். சுய மருத்துவம் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உண்ணவேண்டும். உற்றார் உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. அரசியலில் மேலிடத்தின் கட்டளையை மீறி நடைபெறுவது தவறாக போய் முடியும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் சற்று தடை தாமதங்கள் ஏற்பட்டு விலகும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டுப் போக்கில் கைவிடுவது நன்று.

கடகம்

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் வாய்ப்பு உண்டாகும். தொழிலில் இத்தனைநாள் ஏற்பட்டிருந்த போட்டிகள் படிப்படியாக விலகும் எதிர்பார்த்திருந்த நிதி உதவி தானே கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்து நற்பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த வீண் தகராறுகள் நீங்கி ஒற்றுமை கூடும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். பெண்களுக்கு தடைப்பட்ட காரியங்களில் தடை நீங்கும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் வெற்றி பெற வாய்ப்புண்டு.

தந்தையால் அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வீடு தேடி வரும். தங்கள் பேச்சில் இனிமை கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. உங்கள் முயற்சிகளுக்கு தேவையான உதவிகள் தானாக வந்து சேரும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை ஏற்படும்.

குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியம் கவனத்தில் கொள்ளவும். குடும்பப் பிரச்னைகளில் அயலாரின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து நேர்மறையாக சிந்தியுங்கள். பிரபலங்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும் அவர்களால் ஆதாயம் உண்டாகும். அரசியலில் புதிய பொறுப்புகள் பதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு.

சிம்மம்

பணிகள் திட்டமிட்டபடி நடத்தி முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் உடன்பிறப்பு உதவிகளை செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். நீண்டகாலம் திருமணம் நடைபெறாது இருந்தவர்களுக்கு இல்லம் தேடி வரும் வாய்ப்பு உண்டு. எந்த சூழ்நிலையிலும் மனதை ஸ்திரமாக வைத்துப் போராடி வெற்றி காண்பீர்கள்.

பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விடாமுயற்சியே வெற்றி தரும் காலம் என்பதை உணரும் காலம். யோகா தியானம் போன்ற விஷயங்களில் மனம் நிலைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்கள் தங்களுக்கு சாதகமாக பலன்களைத் தரும். சிலர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

தேவையற்ற மனக்குழப்பம் எதிலும் முடிவெடுக்க இயலாத நிலையை தற்போது தங்களை விட்டு விலகி உள்ளது. உடல் ஆரோக்கியம் மேம்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகும். மனைவி வழியில் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்திலும் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி லாபம் ஏற்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அரசியல்வாதிகள் அனைத்து காரியங்களிலும் வெற்றி வாகை சூடுவார்கள். அதனால் பதவி உயர்வு பொறுப்பு உயர்வு போன்றவை ஏற்படும். கலைத்துறைக்கு திறமைகள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் வெற்றி பெற முயற்சிகள் செய்வீர்கள். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மாற்று பயிர் செய்வதன் மூலம் மேலும் லாபத்தை பெறலாம்.

கன்னி

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எதிர்பாராத திடீர் மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சகோதர சகோதரிகளின் ஆதரவு பெருகும். தாயுடன் நிலையில் இருந்த பிரச்சினைகள் குறையும். விலகிச்சென்ற உறவுகள் விரும்பி வந்துசேரும். தங்கள் முயற்சிகளில் இத்தனைநாள் ஏற்பட்டு வந்த சிறிய தடைகள் நீங்கும். உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். குழந்தைகள் உடல் நிலையில் கவனம் தேவை. பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும்.

கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறுவார்கள். தந்தை வழி அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும். அனைத்தையும் எளிதில் கடந்து வெற்றி பெற இயலும். வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்கேற்ப ஆதாயம் கிடைக்கும் பணிகளை சமாளித்து தக்க தருணத்தில் முடித்துக் காட்டுவீர்கள். புதிய துறைகளில் ஈடுபடும் எண்ணம் உருவாகும். வியாபாரிகளுக்கு இருந்து வந்த அலைச்சல் பதற்றம் குறையும். வாடிக்கையாளர்கள் பெருக்கம் ஏற்படும். விவசாயிகளுக்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். உற்பத்தி நலத்தில் அக்கறை காட்டினால் லாபத்தை எதிர்பார்க்கலாம்.

புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். மக்களிடத்தில் நற்பெயர் பெறும் வாய்ப்பு ஏற்படும். கலைத்துறையினருக்கு வரவு அதிகரிக்கும் காலம் என்பதால் ஆடம்பர செலவுகள் செய்து மகிழ்வார்கள். சிலருக்கு தொழில் நிமித்தமாக இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

துலாம்

பல்வேறு அனுபவங்களையும் நன்மைகளும் அனுபவிக்கும் காலம் இது. தங்கள் பேச்சில் கடுமை காட்டுவதை கூடாது பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் முயற்சியில் கவனம் தேவை. சிறுசிறு தடைகளும் பிரச்னைகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியம் கவனமுடனிருப்பது நல்லது. தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. உறவுகளுடன் மனக்கசப்பு வர வாய்ப்புள்ளதால் சூழ்நிலையில் எச்சரிக்கை நல்லது. புதிய வீடு நிலம் வாகனம் வாங்கும்போது ஆவணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணம் கூடாது. நீண்ட தூர பயணங்களையும் தவிர்ப்பது நன்று. பயணத்தின் போது கைகளில் கவனம் தேவை.

குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் சாதகமான முடிவு தென்படும். எதிரிகளால் சிறு சிறு பிரச்சினை வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் தேவை. விளையாட்டு போக்கை கைவிட வேண்டும். உத்தியோகம் மற்றும் தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எனவே உணவில் கவனம் தேவை. சுய மருத்துவம் கூடாது. நண்பர்களால் ஆதாயம் உண்டு.

முடிந்தவரை வீண் செலவுகளை செய்யாமல் சிக்கனமாக இருப்பது நன்று. நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும் .கலைத்துறையினருக்கு தங்கள் திறமைகள் வெளிப்படும் காலம் இது. அரசியல்வாதிகளுக்கு நீண்டநாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பெரிய மனிதர்களின் தொடர்பு ஆதாயம் கிடைக்கும். அரசால் அனுகூலம் கிடைக்க வாய்ப்புண்டு. விவசாயிகள் அரசால் ஆதாயம் பெறுவீர்கள். பணம் பல வழிகளில் வந்து சேரும் கையாளுவதில் கவனம் தேவை.

விருச்சிகம்

சமுதாயத்தில் மதிப்பு மரியாதை உயரும். பணிகளை தள்ளிப்போடாமல் உடனுக்குடன் செய்து முடித்து சாதனை படைப்பீர்கள். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டு. ஆன்மீக விஷயங்களில் மனம் நாட்டம் கொள்ளும். முடிந்தவரை வீண் பேச்சுகளைத் தவிர்க்கவும். அவர்களுக்கு ஏற்பட்டிருந்த அலுவலகம் தொடர்பான பிரச்சினைகள் படிப்படியாக குறையும். சிலருக்கு பதவி உயர்வு பெறுவதற்கான முயற்சிகள் வெற்றிபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிரயாணங்களின் போது கைகளில் சற்று எச்சரிக்கை தேவை. விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். அரசியல்வாதிகள் தீட்டும் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்து நற்பலனை அடைவீர்கள். கைநழுவிப்போன சில ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும்.

மாணவர்கள் கடுமையாக உழைத்து படித்தால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். உறவினர்களிடம் எந்த உறுதியும் தராமல் இருப்பது நல்லது. நண்பர்கள் வட்டாரத்தில் ஆதரவு பெருகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சில போட்டிகளை சமாளித்து முன்னேறுவீர்கள். உறவினர் வருகையால் உள்ளம் மகிழும் பங்கு சந்தையில் லாபம் உண்டு சக தொழிலாளர்கள் ஒத்துழைப்பு பெருகும். சில சுப காரியங்களுக்கு தலைமையேற்று நடத்தி முடிப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும் நீண்டதூரப் பயணங்களால் அலைச்சல்கள் இருப்பினும் ஆதாயம் உண்டு.

தனுசு

எதையும் சமாளிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். முன் கோபம் மனக்கவலைகளை தவிர்ப்பது நன்று. இதுவரை இருந்த குழப்பங்கள் தடைகள் படிப்படியாக குறையும். இருப்பினும் பேச்சில் நடவடிக்கையில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்வது நன்று. பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்பதால் சிக்கனமாக இருப்பதும் சேமிப்பு விஷயங்களில் கவனத்துடன் இருப்பதும் தேவை.

விடாமுயற்சி வெற்றி தரும் என்பதை உணர்வீர்கள். பயணங்களால் அலைச்சல்கள் இருப்பினும் ஆதாயம் உண்டு. தாய் உறவு மூலம் சில ஆதாயங்கள் கிடைக்க பெறுவீர்கள். வீடு வாகனம் சொத்து வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். வீடுகளை குடியிருக்கும் வீட்டை தங்கள் ரசனைக்கேற்ப மாற்றி அமைப்பீர்கள். தொழில் விஷயங்களில் அதிக கவனம் தேவை. குறிப்பாக கோப்புகளில் பராமரிக்கும்போது கவனத்துடன் செயல்படுவது நன்று. அதேபோல் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது பலமுறை படித்துப் பார்க்கவும் கூடாது.

உடல் ஆரோக்கியத்தில் அதிக எச்சரிக்கை தேவை. சுய மருத்துவம் கூடாது. மருத்துவரின் ஆலோசனைபடி மருந்துகளை உட்கொள்ளவேண்டும். வெளியிட உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும். இரவு நேரப் பயணங்களில் கைப்பொருள் கவனம் தேவை. கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்லவும் குடும்ப விஷயங்களை மூன்றாம் நபர் தலையீடு கூடாது. புதிய நட்புகளிடம் எச்சரிக்கையாக பழகவும் செலவு செய்யும் யோசிப்பது நன்று. அரசியல்வாதிகள் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து செல்லும் மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி படிப்பில் கவனமாக இருக்கவும்.

மகரம்

திட்டமிடுவதில் உறுதியான முடிவு எடுப்பதிலும், சில சமயங்கள் தடைகள் ஏற்பட்டாலும் முடிவில் வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருந்தால் மறைமுகப் பிரச்னைகள் படிப்படியாக தீரும் வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை ஏற்படும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். பண விவகாரங்களில் கவனம் தேவை.

கொடுக்கல்-வாங்கலில் எழுதி வைப்பது நன்று. அரசியல்வாதிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலமிது. மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நன்று. புதிய முதலீடுகளின் போது கவனம் தேவை. வாக்கு தர முன் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து பார்க்க வேண்டும். சகோதர வழியில் ஆதாயங்கள் உண்டு. உணவு விஷயங்களில் எச்சரிக்கை தேவை. கடன் கொடுப்பது வாங்குவது முடிந்தவரை தவிர்க்கவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்த்தால் நிம்மதியாக இருக்கலாம்.

வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் உண்டு. பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். சிறுசிறு தடைகள் வந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவினங்கள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். சிலருக்கு விருப்பமான இடமாற்றம் ஏற்படலாம். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நன்று. யோகா தியானம் வகுப்புகளுக்கு செல்வது நன்று.

கும்பம்

பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் தேவை. யாரையும் முழுமையாக நம்ப கூடாது. மற்றவர்களுக்காக ஜாமீன் போன்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். வசீகரப் பேச்சால் அனைவரும் கவர்வீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும் எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும்.

பழைய பாக்கிகள் வசூலாகும் அரிதான பிரச்னைக்கும் உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். மேலதிகாரி பாராட்டு கிடைக்கும். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன்-மனைவிக்குள் மனவருத்தம் நீங்கும். கலைத்துறையினருக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசியல்வாதிகளுக்கு பொதுவாழ்வில் மதிப்பும் மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமப்பட்டு படித்து முன்னேற்றம் காணலாம்.

பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேருவதில் சில தடைகள் ஏற்படும். கோயில் ஆலய திருப்பணிகள் நினைத்தவரை முடிப்பீர்கள். சிலர் புண்ணிய ஷேத்திரங்கள் சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவார்கள். நண்பர்களுடன் சிலர் இன்பச் சுற்றுலா செல்வார்கள். நீண்டநாள் எதிர்பார்த்த காத்திருந்தவர்களுக்கு திருமண வாய்ப்பு கைகூடி வரும் விரும்பிய இடமாற்றம் சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு பணியில் சாதனை படைப்பீர்கள்.

மீனம்

எதிலும் தீர்க்கமான முடிவெடுத்து செயல்படுவீர்கள். இருப்பினும் தொழில் மற்றும் வர்த்தகத் தொடர்புகள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நிலை மேம்படும். உடன்பிறப்புகள் நன்மை உண்டு. முயற்சிகள் வெற்றியடையும். தாய் உடல்நிலையில் கவனம் தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகம் மற்றும் தொழில் விஷயங்களில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் உயர்வு உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை.

கணவன்-மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும் வியாபாரத்தில் பங்குதாரர்களின் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நன்று. புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நன்று. தந்தையால் அனுகூலம் உண்டு. தொழில் மற்றும் புதிதாக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும். தற்போது பல நல்ல யோகங்களும் அதிர்ஷ்டங்களும் தரவிருக்கும் காலமிது.

இத்தனை நாள் இருந்து வந்த பிரச்சனைகள் தடைகள் சிறிது சிறிதாக விலகும் புதியபாதை தென்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் ஆதாயம் உண்டு மனதில் உற்சாகம் அதிகரிக்கும். எதிர் மின்னேற்றம் கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு பெருகும். சொத்துக்கள் கைக்கு வந்து சேரும் மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.

கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நன்று. அரசியல்வாதிகள் பொது வாழ்வில் புகழ் பெற்றவர்கள் புதிய பொறுப்புகள் வந்து சேரும். விவசாயிகள் தங்கள் உழைப்பைக் ஏற்ப லாபத்தைக் காண்பார்கள் அயல்நாட்டு தொடர்பு ஆதாயத்தை தரும்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.