சிசெல்ஸ் விடுதலை நாள்

சிறப்பு நாள்

சிசெல்ஸ் விடுதலை நாள்

சிசெல்ஸ் இந்தியப் பெருங்கடலில் உள்ள 115 தீவுகளைக் கொண்ட நாடாகும். இதன் தலைவர் விக்டோரியா. கிழக்கு ஆப்பிரிக்க பெரும்பரப்பில் இருந்து 1,500 கி.மீட்டர் கிழக்கே அமைந்துள்ளது. சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு கடந்த 1976 ஜூன் 29-இல் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலைப் பெற்றது.

பிற நிகழ்வுகள்

1534 – பிரின்ஸ் எட்வர்ட் தீவு சாக் கார்ட்டியே என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1613 – லண்டனில் உள்ள குளோப் நாடக மாளிகை தீயில் எரிந்து அழிந்தது.
1786 – அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் ஸ்காட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர்.
1814 – மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர்.
1850 – வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது.
1880 – பிரான்ஸ் டெஹீட்டி தீவைக் கைப்பற்றியது.
1904 – மாஸ்கோவில் இடம்பெற்ற சூறாவளியால் சுமார் 1.500 வீடுகள், கட்டடங்கள் அழிந்தன.
1914 – கிரிகோரி ரஸ்புட்டீன் சைபீரியா நகரில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் தப்பினார்.
1925 – கலிபோர்னியாவில் 6.3 நிலநடுக்கம் ஏற்பட்டதில் சாண்டா பார்பரா என்ற இடம் முற்றாக அழிந்தது.
1976 –சிசெல்ஸ் ஐக்கிய ராச்சியத்தில் இருந்து விடுதலை அடைந்தது.
1995 – அட்லாண்டிஸ் விண்ணோடம் ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதல்தடவையாக இணைந்தது.
1995 – தென் கொரியாவின் சியோலில் சம்பூங் பல்பொருள் அங்காடி இடிந்து விழுந்ததில் 501 பேர் கொல்லப்பட்டு 937 பேர் படுகாயமடைந்தனர்.
2002 – தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் இடம்பெற்ற கடல் மோதலில் ஆறு தென் கொரிய மாலுமிகள் கொல்லப்பட்டு ஒரு வட கொரியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
2007 – ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது கைப்பேசி ஐ-போனை வெளியிட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.