சர்வதேச புலிகள் தினம்
இன்று சர்வதேச புலிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாளுக்கு நாள் வனப்பரப்புகள் சுருங்கி வருவதால் வன விலங்குகளின் வாழ்விடங்கள் மறைந்து வனவிலங்குகள் மறைந்து வருகின்றன. குறிப்பாக புலிகளின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைந்து வருகிறது. இதையடுத்து வனப்பகுதிகளைக் காக்க வேண்டும். அழிந்து வரும் புலிகள் இனத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில் சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
புலிகள் தினத்தில் புலிகள் காப்பகத்தை பராமரித்தல், மேம்படுத்துதல், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து உறுதி எடுக்கப்படுகிறது. புலிகளை அதிக அளவில் வேட்டையாடி வந்ததன் காரணமாகவும், வனப் பகுதிகளை அழித்து வருவதன் காரணமாகவும் உலகில் புலிகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் குறைவு என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். வனச் சூழலில் இயற்கை சமன்பாட்டை பேணுவதில் புலிகள் இன்றியமையாதவை. இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால் மிகச் சில பத்தாண்டுகளில் புலிகள் இனம் முற்றிலும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது என்கின்றனர் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்.
சிறப்பு நாள்
ருமேனியா – தேசிய கீத நாள்
பிற நிகழ்வுகள்
1014 – பைசண்டைன் பேரரசர் இரண்டாம் பசில் பல்கேரிய ராணுவத்தினரைத் தோற்கடித்தார்.
1030 – டானியர்களிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நார்வேயின் இரண்டாம் ஓலாப் போரில் இறந்தார்.
1567 – முதலாம் ஜேம்ஸ் ஸ்காட்லாந்தின் மன்னராக முடிசூடினார்.
1830 – பிரான்சின் பத்தாம் சார்ல்ஸ் முடி துறந்தார்.
1848 – அயர்லாந்தில் “டிப்பெரரி” என்ற இடத்தில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி அடக்கப்பட்டது.
1851 – 15 யுனோமியா என்ற சிறுகோள் கண்டறியப்பட்டது.
1899 – முதலாவது ஹேக் ஒப்பந்தம் நெதர்லாந்தில் ஹேக் என்ற இடத்தில் கையெழுத்திடப்பட்டது.
1900 – இத்தாலியில், முதலாம் உம்பேர்ட்டோ மன்னர் கொல்லப்பட்டார்.
1907 – சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தின் முதல்படியாக அமைந்தது.
1921 – ஹிட்லர் ஜெர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரானார்.
1948 – இரண்டாம் உலகப் போர் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மீண்டும் லண்டனில் தொடங்கின.
1957 – அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது.
1959 – ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் நாசா தொடங்கப்பட்டது.
1967 – வியட்நாம் போர்: வடக்கு வியட்நாமியக் கரையில் ஃபொரெஸ்டல்” என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் தீப்பிடித்ததில் 134 பேர் உயிரிழந்தனர்.
1967 – வெனின்சுலா நாட்டின் 400-ஆம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளின்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 500 பேர் கொல்லப்பட்டனர்.
1981 – வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் – டயானா திருமணம் நடைபெற்றது.
1987 – ஆங்கிலக் கால்வாயூடாக யூரோ சுரங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் ஐக்கிய இராச்சிய பிரதமர் மார்கரட் தாட்சர், மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா மித்தரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
1987 – இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை – இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கையெழுத்தானது.
1987 – இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.
2005 – ஏரிஸ் (குறுங்கோள்) கண்டுபிடிக்கப்பட்டது.
You must log in to post a comment.