சத்யஜித் ரே பிறந்த நாள்

-கண்ணன்சேகர்

02.05.2020 – சனிக்கிழமை –  🟢இன்றைய நாளில்..

📌1921-இல் – இந்திய திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் சத்யஜித் ராய் பிறந்தநாள்.

📌2002 -இல்– தென்னிந்தியத் திரைப்பட நடிகை தேவிகா நினைவு தினம்.

📌2009-இல் – தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் கே. பாலாஜி நினைவு தினம்.

கே. பாலாஜி  கதாநாயகனாக, எதிரியாக, குணச்சித்திர நடிகராக தமிழ் திரையுலகில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நடித்து வந்தவர். 

படித்தால் மட்டும் போதுமா, பலே பாண்டியா உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தவர். பல திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார்.
〰️〰️〰️🎥📽️🎞️〰️〰️〰️


நடிகர் பாலாஜி நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று.
🎵

பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா

பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா

நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்காரக் கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்

துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும்… கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன்… அங்கே… கண்டேன்… வந்தேன்

பெண் ஒன்று கண்டேன்
பொன் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா

நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்கவில்லை

உன் பார்வை போலே
என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி
நீ காணவில்லை
நான் கண்ட காட்சி
நீ காணவில்லை

என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் விழியில் நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்

நீயின்றி நான் இல்லை
நானின்றி நீ இல்லையே
சென்றேன்… கண்டேன்… வந்தேன்

பூ ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா

பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா..

படம் : பலே பாண்டியா

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.