சத்தீஷ்கரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்த மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் மன்காபல் கிராமத்தில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளை தேடுதல் வேட்டையின்போது போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
நக்சலைட்டுகள் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்ததும் போலீஸார் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியபோது அவர்களை நோக்கி நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினராம். இதையடுத்து போலீஸார் பதிலடி கொடுத்தபோது இரு நக்சலைட்டுகள் கொலையுண்டனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை நண்பகலில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. நக்சலைட்டுகளுடன் பதுங்கியிருந்த வேறு சிலர் தப்பியோடி தலைமறைவாயினர். அவர்களை தொடர்ந்து போலீஸார் தேடி வருகின்றனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட இருவரில், ஒருவர் மலாங்கீர் பகுதிக்கான மாவோயிஸ்டுகள் குழு உள்ளூர் கொரில்லா படை தளபதி என்பது தெரியவந்துள்ளது. அந்த நபரின் பெயர் குன்டத்தூர் என்பதும் , அவரது தலைக்கு ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.