கோயம்பேடு சந்தை தற்காலிக இடமாற்றம்

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு வேகமாக கொரோனா நோய்த் தொற்று பரவி வந்ததை அடுத்து தற்காலிகமாக அந்த மார்கெட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.


கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. கோயம்பேடு சந்தையில் குறிப்பிட்ட தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தி செயல்பட அறிவுறுத்திய நிலையில், பொதுமக்கள் அதை முறையாகக் கடைப்பிடிக்க தவறினர்.


இதனால் வியாபாரிகள், தொழிலாளர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், காய்கறி சந்தைக்கு வந்து சென்றவர்கள் என வேகமாக கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியது. இதையடுத்து சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற அரசு அறிவுறுத்தியது.
அதன்படி கோயம்பேடு பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றம் செயப்பட்டது. தற்போது
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, புறநகர் வியாபாரிகள் திருமழிசை சென்று காய்கறிகள் கொள்முதல் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமழிசையில் வரும் 7-ஆம் தேதி முதல் சந்தை செயல்படும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.