கோதுமை கேசரி செய்யலாமா?

கோதுமை ரவை கேசரி…

தேவையான பொருள்கள்
கோதுமை மாவு, கோதுமை ரவை – தலா ஒரு கப் சர்க்கரை – 2 கப் காய்ச்சாத பால் – 3 கப் நெய் – அரை கப் முந்திரி, திராட்சை – தலா 1 ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன் சிவப்பு ஃபுட் கலர் – கால் டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு கோதுமை மாவு, கோதுமை ரவையைத் தனித்தனியாக வறுத்தெடுத்து ஆறவிடவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் காய்ச்சி, கோதுமை மாவைச் சேர்த்துக் கலக்கவும். அடிகனமான பாத்திரத்தில் இரண்டரை கப் தண்ணீருடன் உப்பு, ஃபுட் கலர், கோதுமை ரவை சேர்த்து, மூடி வேகவிடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து, பால் – கோதுமை கலவை, சர்க்கரை சேர்த்து இடையிடையே நெய்விட்டுக் கிளறி, கிளறும்போதே நடுவில் முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். கோதுமை கேசரி தயார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.