கோதுமை அல்வா செய்வது எப்படி?
தேவைப்படும் பொருள்கள்:
கோதுமை, நெய் – தலா 250 கிராம் சர்க்கரை – 750 கிராம் முந்திரி – 20 ஏலக்காய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன் ஜாதிக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன் சிவப்பு ஃபுட் கலர் – அரை டீஸ்பூன்.

செய்முறை:
கோதுமையை 24 மணி நேரம் ஊறவைத்து அரைத்து வடிகட்டி, பால் எடுக்கவும். அதை அரை மணி நேரம் தெளியவைக்கவும். மேலே மிதக்கும் நீரைக் கொட்டிவிடவும். அடிகனமான பாத்திரம் அல்லது இரும்பு வாணலியில் சர்க்கரையுடன் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இளம் பதத்தில் பாகு காய்ச்சவும். அதனுடன் கோதுமைப் பால், ஃபுட் கலர், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து இடையிடையே நெய் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது முந்திரி சேர்த்து இறக்கவும்.
விறகு அடுப்பில் செய்தால் மேலும் சுவையாக இருக்கும்.
You must log in to post a comment.