கொவைட்-19 பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்தது

புதுதில்லி: உலகில் கொவைட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 லட்சத்தை வெள்ளிக்கிழமை கடந்தது.

சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொவைட்-19 புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு மெல்ல பரவத் தொடங்கியது. தற்போதைய சூழலில் உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோய்த் தொற்று பரவியுள்ளது.

இதில் அமெரிக்க மிகப் பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருவதால் 3-ஆவது கட்டத்தை இந்த நோய்த்தொற்று தொடவில்லை.

வெள்ளிக்கிழமை மாலையில் உலக அளவில் கொவைட்-19 நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 22 லட்சத்தைக் கடந்தது. இந்நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 757ஆக உள்ளது. நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி மீண்டவர்கள் 5 லட்சத்து 58 ஆயிரத்து 150-ஆக உள்ளனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.