கொவைட்-19-தமிழகத்தில் பாதித்தோர் 1,323-ஆக உயர்வு


சென்னை: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 56பேருக்கு கொவைட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணி்க்கை 1,323-ஆக உயர்ந்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 283-ஆக உயர்ந்துள்ளது.

இதை தமிழக சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை மட்டும் புதிதாக 56 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை 29 ஆயிரத்து 673 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 14-ஆம் தேதி புதிதாக 31 பேர் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. ஏப்ரல் 15-இல் 38 பேரும், 16-இல் 25 பேரும் பாதிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.