கொரோனா வைரஸ்- ஜின்பிங் எச்சரிக்கை
பெய்ஜிங்: கொவைட்-19 வைரஸ் பாதிப்பு குறைந்துவிட்டதாக யாரும் மெத்தனமாக இருக்க வேண்டாம். தொடர்ந்து எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சீன மக்களுக்கு அந்நாட்டின் அதிபர் ஜின் பிங் எச்சரித்துள்ளார்.
சீனாவில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் தோன்றி, பரவத் தொடங்கியது. அங்குள்ள இறைச்சி சந்தையில் உள்ள பெண்ணுக்கு முதலில் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்றைக்கு இந்நோய்த் தொற்று உலகம் முழுவதும் பரவி ஏராளமானோரை பலி வாங்கி வருகிறது.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீன அரசு, ஊரடங்கு, சமூக விலகல் போன்ற நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான நகரங்களில் ஊரடங்கு உள்ளிட்டவை தளர்வு செய்யப்பட்டுள்ளனர். மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், சீன அதிபர் ஜின் பிங் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாவது:தனிமைப் படுத்துதல், ஊரடங்கு உள்ளிட்டவற்றால் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. வைரஸ் பரவலுக்கு எதிராக நம் எடுத்த நடவடிக்கைள் பெரிய அளவில் பலன் அளித்துள்ளன. இருப்பினும், வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கருதி, மக்கள் மெத்தனமாகவும், அலட்சியத்துடனும் இருக்க வேண்டாம். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூலமாக, மற்றவர்களுக்கு பரவலாம்.
வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை. எனவே, போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
You must log in to post a comment.