கொரோனா புதிய விஷயங்களை கற்றுத் தந்துள்ளது: பிரதமர் மோடி


புதுதில்லி: கொரோனா நோய்த் தொற்று நமக்கு புதிய விஷயங்களைக் கற்றுத் தந்துள்ளது என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை பஞ்சாயத்து ராஜ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து ராஜ் தலைவர்களுடன் காலை 11 மணியளவில் காணொலி காட்சி மூலம மோடி கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியது; கிராமங்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்காக சுயசார்புடன் இருக்க வேண்டும் என்பதை இப்போதைய நெருக்கடி கற்றுத்தந்துள்ளது. இதற்கு முன் நாம் சந்தித்திராத புதிய சவால்களை கொரோனா வைரஸ் நோய்த்தொற்று நமக்கு அளித்துள்ளது. ஆனால் நாம் இதன் மூலம் புதிய விஷயங்களை கற்று கொள்ள இது வழிவகுத்துள்ளது.
இன்றைக்கு கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியை எப்படி இந்தியா சமாளிக்கிறது என்று உலகம் பேசுவதற்குக் காரணம் மக்களின் முயற்சியும், ஒத்துழைப்புமே.
நம்முன் பல்வேறு தடைகள் இருந்தாலும், அவற்றை சவாலாக எடுத்துக் கொண்டு உறுதியுடன் முன்னேறி வருகிறோம் என்றார் அவர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.