கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 690-ஆக உயர்வு


சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: கொரோனா பாதிப்புக்கு இதுவரை 66,431 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 253 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 64 வயது பெண் உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 69 பேருக்கு கொரொனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 39 பேருக்கு கொரொனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 149 பேர் கொரொனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்திருக்கிறது என்றார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.