கொரோனா பாதிப்பு இந்தியாவில் 1.12 லட்சத்தைத் தாண்டியது
புதுதில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.12 லட்சத்தைக் கடந்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்
5,609 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,12,359- ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 45,300-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,435-ஆக உள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 39,27 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
You must log in to post a comment.