கொரோனா பாதிப்பு-இந்தியாவில் 6,412-ஆக உயர்வு


மத்திய சுகாதாரத் துறை தகவல்
புதுதில்லி, ஏப்ரல் 10:இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதை 3-ஆம் கட்டத்துக்கு போகாமல் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது வரை கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 199-ஆக உள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ள வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலில், கடந்த 12 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 547 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 504-ஆக உள்ளது. மருத்துவக் கண்காணிப்பில் 5709 பேர் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.