கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்குகிறது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்கியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 204 நாடுகளில் பரவியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி (5.4.20 அதிகாலை 2.00) கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 93 ஆயிரத்து 764 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 64 ஆயிரத்து 384 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், கொரோனா பரவியவர்களில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 110 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 3,671-ஆகவும்,  உயிரிழந்தோர் எண்ணிக்கை 283-ஆகவும் உயர்ந்துள்ளது.
Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.