கொரோனா பாதித்தோர்: இந்தியாவில் 1.45 லட்சமாக உயர்வு

புதுதில்லி: இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 380-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, நாட்டில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 380-ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 60, 491-ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கொரொனா பாதிப்புக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 80, 722-ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,535 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் விவரம்:
மகாராஷ்டிரம் – 52, 667, தமிழகம் -17,082, தில்லி – 15,053, குஜராத் -14,460.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.