கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்-ராகுல்


புதுதில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பது:
கொரோனா நோய்த்தொற்று பரவலை முறியடிக்க பரவலான சோதனை அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே நாள்தோறும் பரிசோதனை அளவை 40 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக அதிகரிக்க வேண்டும். பிரதமர் துரிதமாக செயல்பட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என ராகுல் கூறியுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.