கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு வழக்கமான ரயில்களை இயக்க வேண்டாம்
ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
சென்னை: கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு வழக்கமான ரயில்களை இயக்க வேண்டாம் என மத்திய உள்துறை, ரயில்வேத் துறை அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தில்லியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ராஜதானி ரயில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளைக் கொண்டது. இதனால் நோய்த்தொற்று வேகமாக பரவும் ஆபத்து உள்ளது. எனவே சென்னைக்கு வரும் பயணிகளை பி.சி.ஆர். பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்க முடியும். எனவே அப்பயணிகளை ரயில்வே துறையே தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என முதல்வர் கோரியுள்ளார்.
இரு நாள்கள் மட்டும் ரயில் சேவை
இந்நிலையில், சென்னைக்கு வரும் 14, 16 தேதிகளில் மட்டுமே ரயில் சேவை அளிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
You must log in to post a comment.