கொரோனா: தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு தொற்று


சென்னை: தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 1,755-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-இல் இருந்து 22-ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் ஒரே நாளில் 52 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 452-ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் நோய் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்க 822-ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.