கொரோனா-தமிழகத்தில் கட்டுப்பாடு பகுதிகள் எவ்வளவு?


சென்னை: தமிழகத்தில் கொரனா நோய்த் தொற்று அதிகமுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளாக 711 அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இதன் எண்ணிக்கை 189 ஆகும்.
ஒவ்வொரு வாரமும் கட்டுப்பாட்டு பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 2- ஆம் தேதி வரை தமிழகத்தில் மொத்தமாக 711 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 189 இடங்கள் இடம்பெற்றுள்ளன. மதுரையில் 41, கோவையில் 37, திருப்பூரில் 31 இடங்கள், கடலூர் மாவட்டத்தில் 21 எண்ணிக்கையில் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன.
கட்டுப்பாட்டு பகுதிகளில் மருத்துவம், அத்தியாவசியப் பணியாளர்கள் தவிர வேறு எவரும் செல்ல அனுமதியில்லை.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.