கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள்

பட்டியல் வெளியிட்டது தமிழக அரசு

சென்னை, ஏப்ரல் 5:தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மாவட்ட அளவில் தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்ட அரசாணை விவரம்:
கொரோனா நோயாளிகளுக்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமையக மருத்துவமனைகள் மற்றும் முக்கிய மாவட்ட தாலுகா மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு அறிவிக்கும் தனியார் மருத்துவமனைகளை நாடும் நோய்த்தொற்றுக்கு ஆளானோர் தங்கள் சொந்த செலவில் சிகிச்சை பெறலாம். மத்திய அரசு நிர்ணயித்துள்ள சிகிச்சை முறைகளை அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து தினமும் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குநரிடம் தனியார் மருத்துவமனைகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மருத்துவமனைகள் விவரம்:
காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சேலையூர் பாரத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோவூர் மாதா மருத்துவமனை.
ஏனாத்தூர் மீனாட்சி மருத்துவமனை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை, பூந்தமல்லி பனிமலர் மருத்துவமனை, தண்டலம் சவீதா மருத்துவமனை, அம்மாபேட்டை ஸ்ரீசத்யசாய் மருத்துவமனை, குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவமனை, மாங்காடு ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவமனை, காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவமனை, ரத்தினமங்கலம் தாகூர் மருத்துவமனை.
திருவொற்றியூர்:
கேளம்பாக்கம் செட்டிநாடு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, குரோம்பேட்டை டாக்டர் ரேலா மருத்துவ மையம் மற்றும் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் வேலப்பன்சாவடி ஏ.சி.எஸ். மருத்துவமனை, டாக்டர் மேத்தா மருத்துவமனை, போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை, திருவொற்றியூர் சுகம் மருத்துவமனை, ஆகாஷ் மருத்துவமனை, அயனம்பாக்கம் அப்பல்லோ மருத்துவமனை.
சென்னை சி.எஸ்.ஐ. கல்யாணி பொது மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, மணப்பாக்கம் மியாட் மருத்துவமனை, வடபழனி விஜயா மருத்துவமனை, பெருங்குடி ஜெம் மருத்துவமனை, பள்ளிக்கரணை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெறலாம்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.