கொரோனா எங்கே தோன்றியது?
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் ஆய்வத்தில் தோன்றவில்லை. அங்குள்ள சந்தையில்தான் முதலில் தோன்றியுள்ளது என அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளிடையே பகிரப்பட்ட உளவுத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் உள் வூகான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கியதாக தொடர்ந்து அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
இநநிலையில், கொரோனா தொடர்பாக சீன நாட்டின் வூகான் நகரில் என்ன நடந்தது என்ற அறிக்கையை வெளியிடுவோம் என்று அமெரிக்க டொனால்டு டிரம்ப் திங்கள்கிழமை கூறினார்.
இச்சூழலில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து ஏற்படுத்திய ஐந்து கண்கள் உளவு பகிர்வு கூட்டணி அமைப்பு, கொரோனா வைரஸ் வூகான் ஆய்வகத்தில் தோன்றவில்லை. அங்குள்ள கடல் உணவு சந்தையில்தான் முதலில் தோன்றியுள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளது.
இது ஒரு இயற்கையான நிகழ்வாகவே இருக்கக் கூடும். இந்த நோய்த்தொற்று இயற்கையாக மனித மற்றும் விலங்குகளின் தொடர்புகளில் இருந்தே வந்திருக்கக் கூடும் என அந்த அமைப்பு கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க உயர்மட்ட தொற்று நோய் நிபுணரான டாக்டர் அந்தோனி ஃபவுசி, கொரோனா வைரஸ் ஒரு ஆய்வகத்தில் தோன்றியதாக நம்பவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
You must log in to post a comment.