கொரோனா-இந்தியாவில் பலி 273-ஆக உயர்வு
புதுதில்லி, ஏப்ரல் 12:கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 273-ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் வேகம் மெல்ல அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பல மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாட்டில் மகாராஷ்டிர மாநிலமே முன்னிலையில் உள்ளது. அங்கு இதுவரை 1500 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 110 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவதாக தமிழகம்: அடுத்ததாக தமிழகத்தில் 969 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இறந்தோர் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. மூன்றாவது இடத்தில் தில்லி உள்ளது. இங்கு 900-க்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,356 ஆக உயர்ந்துள்ளது. 716 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
You must log in to post a comment.