கொரோனா அச்சம்: வூகானில் ஒரு கோடி மக்களுக்கு பரிசோதனை நடத்த முடிவு
பெய்ஜிங்: சீனாவின், வூகான் நகரில் மீண்டும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்நகரில் வசிக்கும் ஒரு கோடி பேருக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதன்முதலில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய வூகான் நகரில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. 76 நாள்களுக்கு அந்நகரில் ஊரடங்கு கடந்த ஏப்ரல் 8-இல் தளர்த்தப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் டாங்ஜிஹூ மாவடடத்தில் ஒரு குடியிருப்பில் 6 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் மீண்டும் வூகானில் கொரோனா பரவத்தொடங்கி விடுமோ என்ற அச்சம் சீனாவுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன்
7 மாகாணங்களில் இன்னமும் கொரோனா நோய்த் தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இச்சூழலில் வூகானில் கொரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க நகரில் உள்ள 1.1 கோடி பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
You must log in to post a comment.