கொரோனாவை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!


சென்னை: கொரோனா வைரஸ் எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர்வாழும் என்ற கருத்துகள் பல்வேறாக உருவெடுத்துள்ளன.
இருமல், தும்மலின்போது மூக்கு, வாய் வழியாக மிகச் சிறிய 3 ஆயிரம் உமிழ்நீர்த்துளிகள் வெளிவரும். இந்த துளிகளின் அளவு 1-5 மைக்ரோ மீட்டராக இருக்கும். அதாவது மனிதரின் சராசரி முடி ஒன்றின் அகலத்தில் 30-இல் ஒரு பங்காக இருக்கும். இந்த துளிகள் ஆடைகள், பொருள்கள் மீது மட்டுமின்றி காற்றிலும் கலக்கும். இந்த துகள்கள் காற்றில் 3 மணி நேரம் உயிர்ப்புடன் இருக்கும். ஆனால் ஒரு உமிழ்நீர்த் துளியில் எத்தனை வைரஸ்கள் இருக்கும் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை இல்லை.
ஒருசில வைரஸ்கள் பரவுவதலில் ஒரு தும்மலில் வெளியாகும் சிறு துளியில் 10 ஆயிரம் கிருமிகள் இருப்பது ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. இந்த அளவு வைரஸுக்கு, வைரஸுக்கு வேறுபடலாம். இதனால் கொரோனாவின் எண்ணிக்கைக்கான தரவு இதுவரை இல்லை.
மலத்தின் மூலமும் கொரொனா பரவும். இதனால் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய கழிவறையை மற்றவர் முழுமையாக சுத்தம் சய்யாமல் பயன்படுத்தினால் அவருக்கு பரவும். நோய்க் கிருமி பரவியுள்ள இடத்தை தொட்டுவிட்டு முகத்தை தொடுவதன் மூலமே கொரோனா பரவுகிறது. இதுதான் கொரோனாவுக்கான முக்கிய பரவல் தன்மையாக உள்ளது.
கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்கள்,, முறையாக சுத்தம் செய்ய்யப்படாத உலோகங்கள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி ஆகியவற்றின் மீது 9 நாள்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்பதை முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன. குளிர்ச்சியான சூழலில் 28 நாள்கள் கூட இவை உயிர் வாழும்.
ஆனால் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் தன்மை இன்னும் முழுமையாக உறுதிசெய்யப்படவில்லை. ஆனால் உலோகங்கள், பிளாஸ்டிக்குகள் மீது படியும் கிருமிகள் 3 நாள்கள் கூட உயிர்ப்புடன் இருந்திருப்பது அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவன ஆய்வின்போது தெரியவந்துள்ளது. தாமிர உலோகத்தால் ஆன பொருள்களின் மேற்பரப்பில் நான்கு மணி நேரம் மட்டுமே இவற்றால் தாக்குப்பிடிக்க முடிகிறது.
துணிகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றின் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. எனினும், ஈரத்தை உறிஞ்சிக்கொண்டு விரைவில் காய்ந்துவிடும் தன்மையுடைய காகித அட்டைகளின் மேற்பரப்பில் பிளாஸ்டிக், உலோகம் ஆகிவற்றைவிட குறைவான நேரமே உயிர்ப்புடன் இருக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக முதல்கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
வீட்டு உபயோகத்துக்கான பிளீச்சிங் பவுடரை பயன்படுத்தினால் கொரோனா பரவியுள்ள இடத்தை ஒருசில நிமிடங்களில் தூய்மைப்படுத்திவிட முடியும்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.