கொரோனாவுக்கு தடுப்பு மருந்து: இத்தாலி புது தகவல்
ரோம்: கொரானா வைரஸை செயலிழக்கச் செய்யும் தடுப்பு மருந்து கண்டுபிடித்தாகிவிட்டது. ஆனால் இது இப்போது மனிதர்களிடம் பரிசோதிக்கப்போவதில்லை என்று இத்தாலி தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து உருவாக்கியுள்ள டாகிஸ் டாகிஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் லூகி ஆரிஷியோ தெரிவித்துள்ள தகவலில், இம்மருந்தை உடலில் செலுத்தும்போது மனித செல்களில் உள்ள கொரோனா வைரஸை செயலிக்கச் செய்யும். எனினும் மனித உடலில் இப்போது பரிசோதிக்கப்போவதில்லை. கோடை காலத்திற்கு பிறகே பரிசோதனை தொடங்கும் என்றுள்ளார்.
இந்த தடுப்பு மருந்தை எலிகளில் பரிசோதித்தபோது வைரஸ் தொற்றுவதை தடுக்கும் ஆன்டிபாடிகள் உருவானது தெரியவந்துள்ளது. தற்போது உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து டி.என்.ஏ., புரோட்டின் மரபணு வகையைச் சேர்ந்தது ஆகும்.
இது மின்இடமாற்றி உத்தி மூலம் செலுத்தப்படும்போது செல்களில் மின்புலம் ஏற்பட்டு மருந்தை செல் தனதாக்கி கொள்கிறது. அதையடுத்து செல்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டு வைரஸை தாக்குகின்றன. இதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த தகவல்கள் அடுத்துவரும் ஆய்வுகளில் தெரியவரும் என இத்தாலி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
You must log in to post a comment.