கொரோனாவுக்கு செப்டம்பரில் தடுப்பூசி வெளிவரும் வாய்ப்பு
புனே: கொரோனாவுக்கான தடுப்பூசி வரும் செப்டம்பரில் தயாராகிவிடும் என புனேவில் உள்ள இந்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகை அச்சத்தில் ஆழ்த்திவரும் கொரோனா நோய்த் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
தற்போது 100-க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் ஆய்வில் உள்ளன. இந்நிலையில் புனேவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்த ஆய்வு மையத்தின் தலைவர் பூணம்வாலா, தற்போது இந்த தடுப்பூசி தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த மருந்து இறுதி செய்யப்பட்டு, செப்டம்பர் மாதத்தில் தயாராகும் வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
You must log in to post a comment.