கொரோனாவில் இருந்து தமிழகம் மீண்ட பிறகே கல்லூரிகள் திறப்பு
உயர்கல்வித் துறை அமைச்சர் தகவல்
சென்னை: தமிழகம் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்ட பிறகே கல்லூரிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று அண்மையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தொடர்பாக அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட பிறகே கல்லூரிகளை திறக்க இயலும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ள கல்லூரிகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். கொரோனா தாக்கம் குறைந்த பிறகுதான் கல்லூரிகள் திறப்பு, செமஸ்டர் தேர்வுகள், மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்த முடிவுகளை எடுக்க முடியும் என்றுள்ளார்.
You must log in to post a comment.