கொரோனாவின் கோரப்பிடியில் இதுவரை…


கொரோனா நோய்த் தொற்றால் இதுவரை உலகில் 44 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவித்துள்ளது.
இதுவரை இந்த நோய்த் தொற்று காரணமாக 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நோய்த் தொற்றில் இருந்து இதுவரை 15 லட்சத்து, 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் அதிக அளவாக 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்து ரஷ்யாவில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் நியூ செளத்வேல்ஸ் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை முதல் உணவு விடுதிகள் மற்றும் காஃபி ஷாப்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் மற்ற நகரங்களில் இன்னமும் கட்டுப்பாடுகள் நீடித்து வருகிறது.
அதிக மக்கள்தொகை உள்ள நகரான சிட்னியில் உணவு விடுதிகள் மற்றும் காஃபி ஷாப்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் 78 ஆயிரத்து 3 பேர் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்களாக உள்ளனர். அவர்களில் 49 ஆயிரத்து 219 பேர் சிகிச்சையில் உள்ளனர். 26 ஆயிரத்து 235 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் 2 ஆயிரத்து 549 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் 9 ஆயிரத்து 227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 ஆயிரத்து 987 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2176 பேர் நோய்த் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.