கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழப்போர் இறப்பு விகிதம் குறைவு-அமைச்சர் தகவல்

சென்னை: கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தமிழகத்தில் மிகவும் குறைவு என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கொரோனா பாதிப்பில் இருந்து உயர் அழுத்தம், இதய நோய் உள்ளவர்களும் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் உலக அளவில் ஒப்பிடும்பொழுதுமிகவும் குறைவு என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் அதிகரித்துள்ள கொரோனா


தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை சனிக்கிழமை 15,512-ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை புதிதாக 759 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 624 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,989-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 103-ஆக உள்ளது. நோய்த் தொற்றுக்கு ஆளாகி மீண்டவர்களின் எண்ணிக்கை 7,491 பேராக உயர்ந்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.