கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்தது
ஜெனீவா: உலகில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலகில் சீனாவின் வூகான் நகரில் முதலில் அறியப்பட்ட கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதும் பரவி 200-க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பெரும் போராட்டத்தைச் சந்தித்து வருகின்றன. சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்திய போதிலும், மீண்டும் அந்நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழப்புகள் தொடங்கியது. அது இன்று வரை தொடர்கிறது. தற்போது வரை உலகில் 3 லட்சத்து 220 பேர் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 85,463 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்து இங்கிலாந்தில் 33,614 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் ஆறுதலான விஷயமாக உலகம் முழுவதும் 16, 82,872 பேர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
You must log in to post a comment.