கொரோனா:இந்தியாவில் பாதித்தோர் 23,077
புதுதில்லி: இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 77-ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து 4,749 பேர் மீண்டுள்ளனர். உயிரிழப்பு 718-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாட்டில் 4,749 பேர் குணமடைந்துள்ளனர். 17,610 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
நாட்டில் அதிக அளவாக மகாராஷ்டிரத்தில் 6,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 283 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச அளவில் பாதிப்பு
கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் பெருமளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்கா – 50,243,
இத்தாலி -25,549,
ஸ்பெயின் – 22,157,
பிரான்ஸ் – 21,856,
பிரிட்டன் – 18,738,
ஜெர்மனி -5,575,
ஈரான் -5,481,
சீனா – 4,632.
You must log in to post a comment.