கே.பி.ராமலிங்கத்தின் நீக்கமும், அவரது பதிலும்

சென்னை, ஏப்.3: திமுகவில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். கட்சியின் கட்டுப்பாட்டை கே.பி.ராமலிங்கம் மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கே.பி. ராமலிங்கம், தான் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து பேசுவதற்கு இது நேரமல்ல. கரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதே முக்கியம். என் வாழ்நாள் தலைவர்களாக எம்ஜிஆரும், கருணாநிதியும் இருந்தனர்.

எம்ஜிஆர் என்னை அறிமுகப்படுத்தினார். கருணாநிதி என்னை வளர்த்தார். ஒரு அரசியல் கட்சியில் இருந்து விடுவித்ததால் எனது மக்கள் பணி இத்துடன் நிற்காது.

இயற்கை நீர்வளப் பாதுகாபு இயக்கத்தில் செயல்பட்டு வருவதால், அதன் மூலம் விவசாயிகள், மக்கள் பிரச்னைகளுக்கு தொடர்ந்து தீர்வு காணும் பணிகளில் ஈடுபடுவேன் என்று பதில் அளித்துள்ளார்.

பின்னணி

கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய காணொலி காட்சி மூலம அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழிசாமி கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அதேபோல் அதன் கூட்டணித் தலைவர்களும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், திமுக விவசாய அணி மாநிலச் செயலராக இருந்த கேபி. ராமலிங்கம் அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையற்றது. ஊரடங்கில் இருந்து விவசாயிகளுக்கு முதல்வர் விலக்கு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என கருத்து கூறியிருந்தார்.

இதன் காரணமாக கட்சிப் பொறுப்பில் இருந்து கே.பி. ராமலிங்கம் நீக்கப்பட்டார். கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்தாலும் தனது கருத்தை வாபஸ் பெற தயாராக இல்லை என கேபி.ராமலிங்கம் கூறிய நிலையில் தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கட்சித் தலைமையால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.