குலாப் ஜாமூன் செய்முறை
தேவையானவை:
பால் – 2 லிட்டர் சர்க்கரை – ஒரு கிலோ மைதா மாவு – 200 கிராம் ஏலக்காய்த்தூள் (அ) ரோஸ் எசென்ஸ் – அரை டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு சமையல் சோடா – 2 சிட்டிகை.

செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிச் சுண்டக் காய்ச்சவும். அத்துடன் மைதா மாவு, சமையல் சோடா சேர்த்து மிருதுவாகப் பிசைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து உருண்டைகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
பின்னர் சர்க்கரையுடன் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி இளம்பாகு பதம் வந்ததும் இறக்கவிடவும். பாகில் பொரித்த ஜாமூன்கள், எசென்ஸ் அல்லது ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு ஊறவிட்டுப் பரிமாறவும்.
You must log in to post a comment.