குர்ஆனை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்…
குர்ஆன் என்பதன் பொருள் என்ன?
ஓதுதல்
குர்ஆனை அருளியவர் யார்?
அல்லாவால் அருளப்பட்டது.
குர்ஆன் எப்போது எழுதப்பட்டது?
லைலத்துல் கத்ர் இரவில் குர்ஆன் எழுதப்பட்டது
யார் மூலம் குர்ஆன் அருளப்பட்டது?
ஜிப்ரயீல் ( அலை )மூலம் அருளப்பட்டது.
எந்த தூதருக்கு அருளப்பட்டது?
முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது
முதன் முதலில் குர்ஆன் எந்த இடத்தில் வைத்து அருளப்பட்டது?
மக்காவில் உள்ள ஹிரா குகையில்
எந்த கலீபாவின் ஆட்சியில் குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது?
அபூபக்கர் (ரலி) ஆட்சி காலத்தில் தொகுக்கப்பட்டது
யார் ஆட்சியில் குர்ஆன் முதலில் பிரதியெடுக்கப்பட்டது?
உதுமான் (ரலி) ஆட்சி காலத்தில் பிரதியெடுக்கப்பட்டது
கலீபா உதுமான் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன் இப்போது எங்குள்ளது?
ஒன்று தாஸ்கண்டில் உள்ளது. மற்றொன்று துர்கியின் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில் உள்ளது
குர்ஆனில் மிகப் பெரிய அத்தியாயம் எது?
சூரத்துல் பகரா – இரண்டாவது அத்தியாயம்
அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் யார் என குர்ஆன் கூறுகிறது?
தக்வா (இறையச்சம்) உடையவர்கள்.
நபி அவர்களின் எந்த வயதில் முதன்முதலாக குர்ஆன் அருளப்பட்டது?
அவரது 40-ஆவது வயதில்
குர்ஆனுக்கு உள்ள பிற பெயர்கள் சில..
அல்ஃபுர்கான், அல்-கிதாப், அத்-திக்ர், அல்-நூர், அல்-ஹுதா
குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன?
114 அத்தியாயங்கள் உள்ளன
.நபி முஸா அவர்களுடன் இறைவன் பேசிய பள்ளத்தாக்கு பெயர் என்ன?
துவா பள்ளத்தாக்கு. இது தூர் மலையின் அடிவாரத்தில் உள்ளது
அல்-குர்ஆனை மனப்பாடம் செய்த முதல் மனிதர் யார்?
முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
நபியின் பெயர்கள் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?
முஹம்மது (ஸல்) என 4 முறையும், அஹமது என ஒரு முறையும் இடம்பெற்றுள்ளது.
இறைவனை வணங்க கட்டப்பட்ட முதல் இறை இல்லம் எது?
கஃபா
இஸ்ராயிலின் வழித்தோன்றல்களுக்கு கடமையாக்கப்பட்ட வணக்கங்கல் என குர்ஆன் குறிப்பிடுபவை எவை?
தொழுகை, ஜக்காத்.
தொழுகையில் அவசியம் ஓதப்பட வேண்டிய சூரா எது?
அல்-பாத்திஹா
You must log in to post a comment.