குடியிருப்பு பகுதியில் விழுந்து தீக்கிரையான பாகிஸ்தான் பயணிகள் விமானம்


கராச்சி: பாகிஸ்தானில் லாகூரில் இருந்து கராச்சி சென்ற பயணிகள் விமானம் கராச்சி குடியிருப்பு பகுதியில் விழுந்து தீக்கிரையானது.
இச்சம்பவத்தில் பயணம் செய்த 99 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்தனர்.
குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.
விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால், இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்களை இராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்கும் புகைப்படங்கள் மற்றும் விடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட டுவிட்டில், விமான விபத்து அதிர்ச்சியும், வருத்தமும் அளித்துள்ளது. விபத்து குறித்து உடனடி விசாரணை நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் கொரொனா தொற்று காரணமாக விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் உள்நாட்டு சேவை தொடங்கியது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.