கீர்த்தி சுரேஷ் படமும் அமேசானிடம் செல்கிறது


சென்னை: கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகவிருப்பதாகத் தெரிகிறது.
அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் நடிகை கீர்த்தி சுரேஷை கதாநாயகியாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது. திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது.
அதையடுத்து தயாரிப்பு வேலைகள் முடிந்து படம் ரிலீஸாகும் நிலைக்கு வந்தபோது கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்ட திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் எனத் தெரியவில்லை.
இந்நிலையில், பெண்குயின் படத்தையும் அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளது. ஏற்கனவே ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஏற்கெனவே இத்தளத்தில் வெளியாகவுள்ளது. இப்போது 2-ஆவதாக ஒரு தமிழ் படம் மீண்டும் அமேசான் கைவசம் சென்றுள்ளது.
ஜூன் முதல் வாரத்திலேயே இந்த படம் OTT தளத்தில் வெளிவரலாம் என தெரிகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.