கிம் ஜாங் என்ன ஆனார்?
சியோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜாங் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் புதன்கிழமை பரவின.
அவர் மரணமடைந்ததுபோல் சவப்பெட்டியில் அவரை கிடத்தி மலர்களால் சுற்றிலும் அலங்காரம் செய்யப்பட்டது போன்றும், தலைவர்கள் பலரும் அவரது சடலத்தை பார்ப்பது போன்றும் ஒரு விடியோ பரவி வருகிறது.
அவர் இறந்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த விஷமிகள் யாரேனும் அப்படிப்பட்ட விடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளனரா, அல்லது உண்மையில் அவரது உயிருக்கு ஆபத்து நேரிட்டதா என்பதும் தெரியாத நிலை உள்ளது.
அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் பலவும் வெவ்வேறானவையாக உள்ளன.
கிம் ஜாங் உன் உயிருடன் இருப்பதாகவும், நடக்கவோ எழுந்து நிற்கவோ முடியவில்லை எனவும் செய்திகள் பரவி வருகின்றன.
அண்டை நாடான தென் கொரியா, கிம் ஜாங் ஆரோக்கியத்துடனும் துடிப்புடனும் உள்ளார் என தகவல் வெளியிட்டுள்ளது.
You must log in to post a comment.