கிம் ஜாங் உன்னுக்கு எந்த அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை

தென்கொரியா தகவல்


வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு எந்த அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை. அதற்காந எந்த ஆதாரமும் இல்லை . அவரது உடல் நிலை குறித்து வெளிவந்துகொண்டிருந்த தகவல்களில் எந்த அடிப்படை தன்மையும் இல்லை என்று தென்கொரிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் கடந்த சில வாரம் முன்பு பொது இடங்களுக்கு வரவல்லை. இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. ஒருசில ஊடகங்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூட கூறின.
இந்நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கிம்ஜாங் உன் கடந்த சில தினங்களுக்கு முன் உரத் தொழிற்சாலை திறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்தார்.
இதைத் தொடர்ந்து தென்கொரிய புலனாய்வு அமைப்பு தெரிவித்த தகவலில், அவரை பற்றி பரவிய வதந்திகளில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. அவர் ராணுவப் படைகள், கட்சிக் கூட்டங்கள் போன்ற உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அத்துடன் கொரோனா தொற்று பரவல் குறித்த கவலை எழுந்துள்ளதால், வெளியில் வருவதைக் குறைத்துக்கொண்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.