கிண்டியில் ரூ.127 கோடியில் கொரோனா சிறப்பு மருத்துவமனை: திறந்து வைத்த முதல்வர்
சென்னை, ஜூலை 6: சென்னை கிண்டியில் ரூ.127 கோடியில் பல்வேறு வசதிகளைக் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
இந்த மருத்துவமனை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் இயங்கவுள்ளது. சிறப்பு மருத்துவமனையில் 80 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் மற்றும் லேப் டெக்னீஷியன்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். புதன்கிழமை முதல் இங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளது. இந்த மருத்துவமனையில் சிடி ஸ்கேன், எக்ஸ் ரே உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் உள்ளன. இவற்றில் 300 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதி கொண்டவை. 70 படுக்கைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்காக 20 வெண்டிலேட்டர்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
30 பேர் அமர்ந்து பயிலும் வசதி கொண்ட நூலகமும், 20 பேர் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் வசதியும், காணொலி மூலம் யோகா பயிற்சி செய்யும் வசதியும் இடம்பெற்றுள்ளன.
You must log in to post a comment.