காஷ்மீர்: இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டம், மன்ஷகாம் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் அடில் அஹமது என்ற அபு இப்ராஹிம் மற்றொருவர் ஷாகின் பசீர் டோக்கர் என தெரியவந்துள்ளது. இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்காக செயல்படும் ஐஎஸ்ஜேகே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.