காஷ்மீரில் 5 பேர் சுட்டுக்கொலை
கொல்லப்பட்டவர்கள் 4 பேர் பயங்கரவாதிகள்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பயங்கரவாதிகள் உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் தெற்கு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லோயர் முண்டா பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
உடனடியாக பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையை அடுத்து அப்பகுதியில் திங்கள்கிழமை சோதனை நடத்தப்பட்டது. அப்போது பயங்கரவாதிகளின் கூட்டாளியின் உடல் மீட்கப்பட்டது. மற்ற பயங்கரவாதிகள் தப்பிச் சென்றிருந்தனர். இந்த மோதலிலின்போது ராணுவ அதிகாரி ஒருவரும் காயமடைந்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
You must log in to post a comment.