காஷ்மீரில் பாதுகாப்புப் படை-பயங்கரவாதிகளுக்கு இடையே மோதல்


ஜம்மு: ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கும், பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.
பயங்கரவாதிகள் டங்கர்போரா பகுதியில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் பாதுகாப்பு படையினரும் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையாக துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.