காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ உயரதிகாரி உள்பட 5 வீரர்கள் பலி


காஷ்மீர்: காஷ்மீரின் வடக்கில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் உயிரிழந்துள்ளது.
ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதிக்கு பாதுகாப்புப் படையினர் சென்று தேடுதல் வேட்டையை நடத்தியபோது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எதிர்தாக்குதலை ராணுவத்தினர் நடத்தினர். நீண்டநேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணு உயர் அதிகாரி உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.