காஷ்மீரில் பயங்கரவாதிகள்-பாதுகாப்புப் படை இடையே துப்பாக்கிச் சண்டை?


ஜம்மு: காஷ்மீரில் கோரிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினருடன் மோதி வருகின்றனர். இப்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சண்டை நடந்ததாகத் தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கோரிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ள தகவலை அறிந்த பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இது தொடர்பான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் தெரியவரும்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.